பராபரம்
பரம[தன்]னை அறியும் பாடங்கள்
உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கின்றது.
குருர் பிரஹ்மா, குருர் விஷ்ணு,
குருர் தேவோ மஹேச்வர:
குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குரவே நம:
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலை யென்றுணர்வீர்கள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லார் நெஞ்சத்து காண ஒண்ணாதே.
– திருமந்திரம்.
எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும், இந்த நிலையற்ற பொருள் சார்ந்த வாழ்வையும், எதிலும் நிலையாக நிற்க முடியாத, அருள் சாராத மனதையும், நிரந்தரமாக இருக்க முடியாத, அழியக்கூடிய உடலையும், நிலையானவைகள் என எண்ணும், எல்லா உயிர்களுக்குள்ளும் அந்த இறைவனே நிலைப்பெற்றுள்ளான் என்பதை உணராதவர் நெஞ்சத்தில் பரம[தன்]னைக் காண முடியாதே.
அகண்டமாய், ஆதியாய், அனைத்துமாய், ஏகமாய் எங்கும் நிறைந்திருக்கின்ற அந்த எல்லையில்லா மெய்ப்பொருளை ஒரு எல்லைக்குள் மட்டும் பார்க்க முயல்வது, நமக்கு கொடுக்கப்பட்ட இந்த புறப்புலன்களினால் என்றுமே சாத்தியமாகாது.
ஏன்? என்றால்,
“என் கண்களைக்கொண்டு மற்ற அனைத்தையும் பார்க்கலாம், ஆனால், அதே கண்களைக்கொண்டு, என் கண்களையே நான் பார்க்க முடியாது.”
இதுப்போலத்தான், “நான்” என்ற ஒரே தூய அறிவு ஒளியாக நானே இருந்துக்கொண்டு, என்னையே நான் எனக்கு வேறாக வெளியே தேடிக்கொண்டிருப்பது, என்னுடைய மனதின் அறியாமை இருள் என்பதை எடுத்துக்கூறும், என்னுடைய உள்ளத்தை உணரும் மிக உயரிய ஆன்மவியல் பாடங்களான அத்யாத்மயோகம் எனும் வேதாந்தப் பாடங்களை எளிய தமிழில் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த இணையதளத்தில் போதிக்கப்படுகின்றன.
நன்றி
வகுப்புகள் நடைபெறும் விபரம்:
ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் “பராபரம் டெலிகிராம் ஆப் (Telegram App) குழுவின்” மூலம் நடைப்பெறும்.
இந்த வகுப்பில் கலந்துக் கொள்ள கீழே உள்ள இணைப்பு லின்க்கை பயன் படுத்திக் கொள்ளலாம்.
https://t.me/+tQuZ7i1nCjNhMzc1
25.01.2024 முதல் “தைத்திரீய உபநிஷதம்” வகுப்பு நடைப்பெறும்.
ஆன்லைன் வகுப்புகள் நடைப்பெறும் விபரம் அவ்வப்போது அறிவிக்கப்படும்.
ஆன்லைன் வகுப்பில் [பராபரம் டெலிகிராம் குழு] இணைவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்ட இமெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி!