ஸ்ரீ குருப்யோ நம:
அனைவருக்கும் வணக்கம்,
பரம[தன்]னை அறிய ஆர்வமுடன் வருகின்ற பாமரர்களின் ஒரு ஆரம்ப பள்ளிக்கூடமாக இந்த “பராபரம் பாடசாலை” பயன்படுகின்றது.
இந்த பள்ளியில், படிக்கின்ற ஆன்மீக ஆர்வலர்களாகிய மாணவர்கள் பலரும் பல தேசங்களில், பல ஊர்களில், பல பகுதிகளில் இருப்பதினால், அவர்களால் அங்கிருந்து, இந்த ஊருக்கு வந்து நேரடி வகுப்பில் கலந்துக்கொள்வது என்பது இயலாத காரியமாக உள்ளது.
அதனால், அந்தந்த ஊர்களில் இருக்கும் மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு, அவர்களது இல்லம் தேடி, இந்தப் பள்ளிக்கூடமே இன்று முதல் [10.12.2023] இணையதளம் வாயிலாக வகுப்புகளைக் கொடுத்து வருகின்றது. இந்த அத்யாத்ம யோகம் எனும் ஆன்மவியல் கல்விக்கான இணையதள வகுப்புகள் டெலிகிராம் சேனல் (Telegram App) மூலமாக, “பராபரம் குழுவில்” தினந்தோறும் (Daily Online Classes) நேரடியாகவே நடக்கின்றன.
ஆசிரியரும், மாணவர்களும் இந்த உலகத்தில் எங்கிருந்தாலும், இவர்கள் இருவரையும் ஒன்றாக இணைக்கும் ஒரு பாலமாக, இந்த https://paraparam.in/ என்ற இணையதளம் இருப்பதினால், இதன்மூலம், அத்யாத்ம யோகம் எனும் அக வாழ்க்கைக்கான கல்வியைக் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பு அனைவருக்கும் அமைகின்றது. அதுவும் எளிய தமிழ் மொழியில் எல்லோருக்கும் இந்த கல்வியைக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
இந்த இணைய தளத்தில் போதிக்கப்படுகின்ற, அத்யாத்ம யோகம் எனும் ஆன்மவியல் பாடத்திட்டங்கள் அனைத்துமே, அந்த ஆன்மாவை அறியக்கூடிய, மிக அரிய பொக்கிஷங்கள் என்பதினால், அவைகளை, மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்து, இனி வருகின்ற இளைய தலைமுறையினருக்கும் இக்கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற, உயரிய நோக்கத்திலும், இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.
இந்த https://paraparam.in/ இணையதளத்தைப் பயன்படுத்தி, எல்லோரும் இன்புற்று வாழ, இந்த ஆத்மஞானத்தை அடைய வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்.
நன்றி!
என்றும் அன்புடன்,
ப்ரக்ஞன்.