நாத யோகம் (Nadha Yoga)
நாத யோகம் (Nāda Yoga) என்பது, மிகவும் பழமையான ஆன்மீகம் சார்ந்த ஒரு தெய்வீக கலையாகும். நாதம் என்பது ஒலி என்பதினால், அது பரம்பொருளின் நுண்ணிய வடிவம் ஆகும். அந்த வகையிலே நாத யோகம் என்ற நாதத்தை தியானிக்கும் வழிமுறையை நமது பண்டைய ரிஷிகளில் ஒருவரான பகவான் ஸ்ரீ தத்தாத்ரேயர் வழியில் வருகின்ற நவநாதர்கள் மூலமாக வெளிப்பட்டது.
📍இது நவநாதர்களின் யோக முறையில் சப்தம் (ஒலி) அல்லது நாதம் என்ற ஒலி மூலமாக, ஆன்மீக உணர்வை அடையும் ஒரு உன்னத உபாசனை முறையாகும்.
📍இந்த உபாசனை முறையில், உடலை, மூச்சை, மனதை சுத்திகரித்து, பிந்து என்கின்ற ஆன்மீக ஒளியுடன் (பிரம்மம்) இணைய வழிகாட்டுகிறது.
📍இது “சப்தாத் பரம்” என்ற உபநிஷத போதனைக்கு அடிப்படை ஒலி என்பதினால், இந்த ஒலியின் மூலம் ஒளியை (பரம்பொருளை) உணர முடிகின்றது.
🔷 நாத யோகத்தின் முக்கிய பாகங்கள் என்ன?
அக்ஷர நாதம் – ஒவ்வொரு மந்திரத்திலும் உள்ள அக்ஷரங்களின் உள்ளார்ந்த ஒலி அனாஹத நாதம் – உடலுக்குள் இயற்கையாக தோன்றும் இசை (உதாரணம்: ஓம் ஒலி, மணி ஓசை போன்றவைகள்) ஸ்ரவண சக்தி – உள்ளூரான காது – சூட்சுமமாக உள்ள ஒலிகளை கேட்கும் திறன் நாத தியானம் – நாதத்தை நுட்பமாக கேட்டு அதன் மீது மனதை ஸ்திரப்படுத்தும் பயிற்சி.
🔷 நாத யோகத்தின் கட்டங்கள் எத்தனை?
- நாத யோகத்தில் 10 நாத நிலைகள் உள்ளன. (அவைகளை சிவயோக வழி என்று கூறப்படுகின்றது.)
- சப்த நாதம் (வெளி ஒலி)
- சப்த நாதம் (மந்திர ஒலி)
- தீக்கொலி
- முரசொலி
- சங்கு நாதம்
- மணி ஒலி
- பீஜ நாதம்
- அனாஹத நாதம் (உள்ளுற ஒலி)
- சூன்ய நாதம் (மௌன நிலை)
பர நாதம் (நிறைவு – - பரம்பொருளுடன் இணையுதல்)
🔷 நாத யோகத்தில் சாதகனுக்கு ஏற்படும் பலன்கள் யாது?
- மன அமைதி மற்றும் ஸ்திரதையுடன் கூடிய நிலை.
- மூச்சு மற்றும் மன ஒழுங்கு (பிராணாயாமம், தெளிந்தமனம்).
- நுண்ணிய இசை கானங்கள் (Divine inner sounds) கேட்டல்.
- பரசிவ அனுபூதி (நிர்விகல்ப சமாதி நிலை).
🔷 நாத யோகத்தில் பயிற்சிகள் என்னென்ன?
- ஓம் ஜபம் – தாள ஒத்த ஒலி மூலம் மனத்தை ஒன்றாகச் செய்யும்.
- நாத ஸ்ரவணம் – மௌனமாக உட்கார்ந்து உள்ளுற ஒலிகளை கேட்கும்.
- சூட்சும பிராணாயாமம் – மூச்சின் ஒலி நுண்ணியமாகக் கவனித்தல்.
- துரிய தியானம் – துரியம் நிலையில் நாதத்தை தெளிந்த மனதுடன் நோக்குதல்.
🔷 நாத யோகம் யார் யாருக்கு தேவைப்படும்?
தியானத்தில் ஸ்திரம் அடைய விருப்பமுள்ளவர்கள் ஸ்ரீவித்யா உபாசகர்கள் மற்றும் தத்துவ யோகங்களில் ஈடுபாடுள்ளவர்கள் என எல்லோருக்கும் பொதுவானது இந்த நாத யோகம். 🙏🪷
இந்த 21 நாள் வீடியோ வகுப்புகளுக்கான PDF புத்தகங்கள் ஒவ்வொரு வீடியோவின் கீழே பதிவிறக்கம் செய்ய (download) வழங்கப்பட்டுள்ளன.
